கோழி முட்டையும் அதன் பயன்களும் (The Good Egg)


Children Feed


முட்டைகள் என்பவை ஒரு ஊட்டச்சத்து சக்தி நிலையமாகும். 

ஒரு பெரிய முட்டையில் (அண்ணளவாக 55 கிராம் அளவுள்ள முட்டை) 6.5 கிராம் புரதம், அத்தியாவசியமான 09 வகையான அமினோ அமிலங்கள், எலும்புகள், பற்கள், தோல் மற்றும் கண்கள் ஆகயவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பிரதானமான 14 வகை ஊட்டச்சத்துக்கள் ஆகியன உள்ளன. இதில் சிறப்பம்சம் என்னவெனில் இவை அனைத்தினையும் உள்ளடக்கியுள்ள முட்டையானது 80 கலோரிகளை மாத்திரமே உள்ளடக்கியுள்ளது என்பது தான்.
The Good Egg

முட்டையொன்றில் உள்ளடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களும் அவற்றின் பயன்களும்:
  • வைட்டமின் B12 இதய நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
  • கோலின் (Choline) மூளை வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான ஊட்டச்சத்து அத்துடன் குறிப்பாக குழந்தைகளுக்கு முக்கியமானது.
  • லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் (Lutein and Zeaxanthin) நல்ல கண் பார்வையினை பேணுவதற்கு உதவுகிறது அத்துடன் முதுமை காரணமாக ஏற்படும் பார்வைக் குறைபாடு அபாயத்தை குறைப்பதற்கு உதவுகின்றது.
  • உடல் திசுக்களினை ஆரோக்கியமாக பேணுவதற்கு செலினியம் (Selenium) உதவுகிறது.
  • முட்டைகளில் உள்ள இரும்புச் சத்தானது உடலால் எளிதில் உறிஞ்சப்பட்டு உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது.
  • ஃபோலேட் பி9 (Folate B9) புதிய செல்களை உற்பத்தி செய்து பராமரிக்க உதவுகிறது மற்றும் கர்ப்ப காலத்தில் ஆபத்தான பிறப்பு குறைபாடுகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

  • வைட்டமின் D மற்றும் பாஸ்பரஸ் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகின்றன
  • வைட்டமின் A ஆரோக்கியமான தோல் மற்றும் கண் திசுக்களை பராமரிக்க உதவுகிறது மற்றும் இரவு பார்வைக்கு உதவுகிறது.
  • வைட்டமின் E ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது நோயைத் தடுப்பதில் பங்கு வகிக்கிறது


நீங்கள் எந்த வகையான முட்டைகளை வாங்கினாலும், அனைத்து முட்டைகளிலும் ஒரே விதமான அதே ஊட்டச்சத்துக்களைப் பெறுகிறீர்கள்.


No comments

Powered by Blogger.