இறைச்சிக் கோழி வளர்ப்பில் சந்தைப்படுத்தல் பிரச்சனையை வெற்றிகரமாக எதிர்கொள்வது எவ்வாறு? - PART 01


கோழி வளர்ப்பில் குறிப்பாக இறைச்சிக் கோழி வளர்ப்பு இலாபமானது. சந்தைப்படுத்தலில் உள்ள கால வரையறையான 35 தொடக்கம் 42 நாட்களுக்குள்ளான விற்பனை செய்ய வேண்டிய தேவையானது இடைத்தரகர்களுக்கும் விற்பனை முதலாளிகளுக்கும் சாதக தன்மையை ஏறபடுத்துவதோடு கோழி வளர்ப்பில் ஈடுபடுபவருக்கான இலாபத்தின் அளவு குறையக் காரணமாக அமைந்து விடுகின்றது. இது தான் இறைச்சிக் கோழியினை வளர்ப்பதற்கு பலர் பின்னிற்பதற்கான காரணமாக அமைந்து விடுகின்றது. இதற்கு தீர்வு தான் என்ன? 

இதற்கான ஒரே தீர்வு பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தி தான். அதாவது இறைச்சிக் கோழியில் இருந்து பெறப்படும் இறைச்சியினை பெறுமதி சேர் உற்பத்தியாக மாற்றுவது தான். பெறுமதி சேர் உற்பத்தி எனும் போது அது உங்களால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திகளை அதனுடைய வடிவத்தை அல்லது தன்மையினை மாற்றுவதன் ஊடாக பெறப்படும் அதிக இலாபத்தை ஈட்டித் தருவதனையே குறிக்கின்றது.

அவ்வாறெனில் எவ்வாறான பெறுமதி சேர் உற்பத்திகள் இறைச்சிக் கோழியினைப் பொறுத்தவரை சாத்தியமானது? அவை பின்வருமாறு: 

01. பைக்கற் செய்யப்பட்ட இறைச்சி


இறைச்சிக் கோழி உரிய முதிர்ச்சிக் காலத்தினை அடைந்ததும் குறித்த கோழியினை உரித்து இறைச்சியாக்கி நன்றாக சுத்தம் செய்யத பின்னர் அவற்றை கறி சமைப்பதற்கு ஏற்றவாறு சிறு துண்டுகளாக்கி மஞ்சள் மற்றும் உப்புத் தடவி பல்வேறு அளவுகளில் பைக்கற்றில் அடைத்து விற்பனை செய்யலாம். இவ்வாறு செய்வதனால் வாங்கும் வாடிக்கையாளர்கள் உடனடியாக சமைக்க முடியும். அத்துடன் இவற்றை எம்மை சூழ உள்ளவர்களுக்கும் மற்றும் சமூக இணையத்தளங்கள் ஊடாகவும் விற்பனை செய்ய முடியும். 


இதனுடைய இலாபம் எவ்வாறு அமையும் எனக் கணக்கிட்டுப் பார்க்கும் போது பெறுமதி சேர் உற்பத்திகளின் நன்மை பற்றி புரியும்.

முழுமையாக கோழியாக இடைத்தரகர் ஒருவரிடம் கொடுக்கும் போது பெறப்படும் தொகை (ஒரு கோழி அண்ணளவாக 2.5 கிலோ உள்ளது எனின்)

2.75 X 280 = 700.00 (நிகர இலாபம் : 700 - 560 = 140)

இதே கோழியில் இருந்து அண்ணளவாக 2.0 கிலோ இறைச்சியினைப் பெற முடியும் எனின் அதற்கான செலவு பின்வருமாறு அமையும்:

#

செலவு விபரம்

 தொகை

1

கோழி ஒன்றினை உரிப்பதற்கான மற்றும் துப்பரவு செய்வதற்கான கூலி

    100.00

2

உப்பு மற்றும் மஞ்சள் தூள்

     30.00

3

பொதியிடல் செலவு

     20.00

4

விளம்பரம்

     10.00

மொத்தம்

     160.00

விற்பனை முலம் கிடைக்கும் வருமானம்

02 கிலோ இறைச்சி X 650.00

   1,300.00

பொதியிடல் மற்றும் ஏனையவை

    160.00

உற்பத்திச் செலவு

    560.00

மொத்தச் செலவு

    720.00

நிகர இலாபம் (வருமானம் - செலவு)

   580.00


பெறுமதி சேர் உற்பத்தி மூலம் இறைச்சிக் கோழி வளர்ப்பில் 01 இறைச்சிக் கோழிக்கு பெறும் மேலதிக வருமானம் 580 - 140 = 440.00

No comments

Powered by Blogger.