முட்டைகளை வெற்றிகரமாக சந்தைப்படுத்துவது எவ்வாறு?


தற்பொழுது நுகர்வோரைப் பொறுத்தவரை சுத்தமானதும் உடனடியாகப் பெறப்பட்ட முட்டைகளையும் பெற்றுக்கொள்வதனை அதிகம் விரும்புகின்றனர். எனவே அவர்களுடைய நம்பகத்தன்மையினை அதிகரிக்கும் வகையில் கோழி வளர்ப்போர் தமது முட்டை வர்த்தகத்தை நேர்த்தியாகவும் அதேவேளை நம்பகத் தன்மையுடையதாகவும் அமைத்துக் கொள்ளல் வேண்டும். 

இதனை சரியானதும் நேர்மையானதாகவும் அதேவேளை திட்டமிட்டதாகவும் மேற்கொள்ளும் போது உங்களுடைய கோழி வளர்ப்பில் இருந்து பெறப்படும் முட்டை விற்பனை வருமானம் அதிகரிப்பதுடன் உங்களுடைய பண்ணையும் வளர்ச்சியடையும். எனவே இதனை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு எவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என நோக்குவோம். 

01. முட்டைகளை சந்தைப்படுத்தும் போது கைக்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் அறிந்து கொள்ளுங்கள்.


உதாரணமாக சுகாதார நடைமுறைகள், லேபிள் இடுதல் மற்றும் அனுமதிப் பத்திரம் பெறுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் உங்களுடைய பிரதேச சுகாதார பரிசோதகர் மற்றும் பிரதேச சபை மற்றும் பிரதேச செயலங்களை தொடர்பு கொண்டு கேட்டறிந்து கொள்ளுங்கள்.

02. வாராந்தம் நீங்கள் உற்பத்தி செய்யவுள்ள முட்டைகளின் எண்ணிக்கையினை தீர்மானியுங்கள்


வாராந்த முட்டை உற்பத்திகளின் எண்ணிக்கையினை ஆகக்குறைந்தது 20 ஆக தீர்மானியுங்கள். ஏனெனில் அதனைவிட குறைந்த தொகையானது உங்களுடைய முட்டைக்கான கேள்வியின் அளவினை தீர்மானிப்பதற்கு போதுமானதாக அமையாது விடலாம்.

03. பொதிசெய்து விற்பனை செய்யுங்கள்



நீங்கள் விற்பனை செய்யும் முட்டைகளின் தொகை குறைவானதாக இருப்பினும் கூட நீங்கள் அவற்றை பொதிசெய்து உங்களது பண்ணையின் இலச்சினை இட்டு லேபிள் இட்டு விற்பனை செய்யவும். உங்களது பொதியிடல் 04 முட்டைகளில் இருந்து ஆகக்கூடியது 10 முட்டைகள் வரை அமையட்டும். தேவைக்கேற்ப பொதியட்டு விற்பனை செய்யுங்கள். இவ்வாறு செய்வதானது உங்களது முட்டைக்கான தரத்தினை அதிகரிப்பதுடன் கேள்வியினையும் அதிகரிக்கச் செய்யும்.

04. உங்களது முட்டைகளை விளம்பரப்படுத்துங்கள்


உங்களது முட்டைகளை விளம்பரம் செய்யுங்கள். இவ்வாறு செய்வதானது சந்தைவாய்ப்பினை ஏற்படுத்துவதோடு உங்களுடைய நிறுவனத்தின் பெயரையும் மக்களுக்கு அறியச்செய்வதாக அமையும்.

கீழே உங்களுக்கு உதாரணத்திற்காக ஒரு விளம்பரம் தரப்படுகின்றது.



உங்களது கருத்துக்களையும் அனுபவங்களையும் கீழே பதிவிடுங்கள்.

நன்றி

நிர்வாகம்
வவுனியா ஒருங்கிணைந்த பண்ணையாளர்கள்

No comments

Powered by Blogger.